அகமதாபாத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் இந்தியாவுக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன் முதல் ஓவரை வீழ்த்தினார். இளம் வீரர் கில் மூன்று பந்துகளை சந்தித்த நிலையில் ஆண்டர்சனின் வேகத்தில் LBW முறையில் விக்கெட்டை இழந்தார். அதனால் இந்திய அணி ரன் கணக்கை தொடங்காமலே விக்கெட்டை இழந்தது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்தது. புஜாரா 15, ரோகித் சர்மா 8 ரன்களையும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. புஜாராவும், ரோகித் ஷர்மாவும் நிதானமாக விளையாடி வந்தனர். ஆனால் புஜாரா 17 ரன்கள் எடுத்திருந்தபோது லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியை வெளுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார். இதனையடுத்து ரோகித் , ரஹானே பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் உணவு இடைவேளைக்கு முன்னதாக ரஹானே 27 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் உணவு இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்துள்ளது.
Loading More post
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி