என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தங்கள் கூட்டணியில்தான் இருக்கிறார் என புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே இதுவரை கூட்டணி உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. ரங்கசாமியை பொருத்தவரை தாங்கள் கூட்டணியில் இருப்பதாகவும் தொடர்வதாகவும் இதுவரை எவ்வித தகவலும் வெளியிடவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மட்டுமே என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே திமுகவும் என்.ஆர்.காங்கிரஸோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திமுக உள்ளிட்ட கட்சிகளின் மதச்சார்பற்ற கூட்டணிக்கு தலைமை தாங்க என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வரவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஒப்புதல் கொடுத்துவிட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், தோல்வி பயத்தால் மக்களை குழப்பும் பணியில் திமுக காங்கிரஸ் ஈடுபடுவதாக புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டியளித்துள்ளார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் ரங்கசாமி உள்ளார் எனவும் இன்னும் இரண்டு தினங்களில் முடிவு வெளியாகும் எனவும் தெரிவித்தார்.
Loading More post
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை