ரமலான் அன்று சி.பி.எஸ்.இ தேர்வுகள் நடக்க இருப்பதைச் சுட்டிக்காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வி அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியிருந்தார். அக்கோரிக்கை பரிசீலிக்கப்படுமென்று மத்திய கல்வி அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளான ரமலானுக்கு இந்தாண்டு தமிழக அரசும், மத்திய அரசும் மே 14 அன்று ரமலான் விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால் ரமலான் திருநாள், பிறை தென்படுவதைப் பொறுத்து மாறுமென்பதால் ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதை கணக்கில் கொள்ளாமல் சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளை மே 13 மற்றும் மே 15 தேதிகளில் அறிவித்துள்ளது. இந்த தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகளை வேறு தேதிகளுக்கு மாற்ற வேண்டும் என சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பிப்ரவரி 23, 2021 தேதியிட்ட கடிதம் மூலம் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அளித்துள்ள பதிலில் "சி.பி.எஸ்.இ தேர்வுத் தேதிகளை மாற்றுவது குறித்த உங்கள் பிப்ரவரி 8 தேதியிட்ட கடிதம் கிடைத்தது. அதன் மீது பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி, "எனது கோரிக்கை பரிசீலிக்கப்படுவது மகிழ்ச்சி. நல்ல முடிவு விரைவில் வருமென்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ