துருக்கியில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்
துருக்கி நாட்டின் பிட்லிஸ் மாகாணத்தில் அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கடந்த வியாழக்கிழமை அன்று, வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. ஹெலிகாப்டரில் லெப்டினன்ட் ஜெனரல் உட்பட பல்வேறு வீரர்கள் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட அரை மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியில் பிட்லிஸ் மாகாணத்தில் உள்ள பனிமலைப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது.
இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் உள்பட ராணுவ 9 வீரர்கள் பலியாகியுள்ளதாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் தென்கிழக்கு பகுதியில் மூடு பனி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குர்திஷ்தான் எனும் தனி நாடு உருவாக்குவதற்காக போராடிவரும் குர்திஷ் போராளிகளை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட துருக்கி படைப்பிரிவைச் சேர்ந்த குழுவினர்தான் இந்த கோர விபத்தில் சிக்கியுள்ளனர்.
Loading More post
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை
வெற்று பேச்சுகள் தேவையல்ல, நாட்டிற்கு தீர்வைக் கொடுங்கள்: ராகுல் காந்தி
ஆக்சிஜன் வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
அரசின் பொறுப்பை நீதிமன்றம் சொல்லும் நிலைமை பெருமைக்குரியதா? : கமல்ஹாசன்
மேற்குவங்கத்தில் பரவும் மும்முறை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ்!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ