[X] Close >

ரன் கணக்கை துவங்காமல் விக்கெட்டை இழந்த இந்திய அணி

India-Loses-wicket-without-scoring-Run-in-the-Fourth-Test-Against-England-in-Ahmedabad-Narendra-Modi-Stadium

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது. 


Advertisement

ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் இந்தியாவுக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன் முதல் ஓவரை வீழ்த்தினார். இளம் வீரர் கில் மூன்று பந்துகளை சந்தித்த நிலையில் ஆண்டர்சனின் வேகத்தில் LBW முறையில் விக்கெட்டை இழந்தார். அதனால் இந்திய அணி ரன் கணக்கை தொடங்காமலே விக்கெட்டை இழந்தது. ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 15, ரோகித் சர்மா 8 ரன்களையும் எடுத்து களத்தில் உள்ளனர்.

அகமதாபாத் ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சவலானே காரியம் என்பதை இது வெளிக்காட்டுகிறது என தெரிவித்துள்ளனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close