இந்திய ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு ஐம்பதாயிரம் அமெரிக்க டாலரை சன்மானமாக கொடுத்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 36,36,875 ரூபாய்க்கு அந்த தொகை நிகராகும். Bug Bounty Program திட்டத்தின் கீழ் இந்த சன்மானத் தொகையை வழங்கியுள்ளது மைக்ரோசாப்ட்.
பயனர்களின் மைக்ரோசாப்ட் கணக்குகளை எளிதில் ஹைஜெக் செய்யப்படலாம் என்ற பாதிப்பை சந்தேகத்தின் அடிப்படையில் கண்டறிந்ததற்காக இந்த சன்மானம் லட்சுமண் முத்தையாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எந்தவொரு மைக்ரோசாப்ட் கணக்கையும் அனுமதியின்றி அதன் விவரங்களை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கலாம் என்ற பிழையை தான் முத்தையா கண்டறிந்திருந்தார். அது பயனர்களின் தகவல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதை மைக்ரோசாப்டுக்கு தெரிவித்ததன் மூலம் இந்த சன்மானத்தை பெற்றுள்ளார்.
Microsoft Account Takeover! ?? Thank you very much @msftsecresponse for the bounty! ???
Write up - https://t.co/9ATsxAUfeB pic.twitter.com/pDEYv5f400 — Laxman Muthiyah (@LaxmanMuthiyah) March 2, 2021
இதற்கு முன்னதாக முத்தையா இதே போல இன்ஸ்டாகிராமிலும் Bug ஒன்றை கண்டறிந்தார்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்