[X] Close >

தொடரும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை : 27 கேட்கும் காங்கிரஸ்... 22 வரை வந்துள்ள திமுக...!

dmk-give-22-seats-for-congress-in-assembly-election

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 22 தொகுதிகள் வரை தருவதற்கு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அதன்படி அதிமுகவில் பாமகவுடன் மட்டும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியுடனும் மனித நேய மக்கள் கட்சியுடனும் விசிகவுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகள் கேட்டு வருவதாகவும் திமுக 18 லிருந்து 22 தொகுதிகள் வரை வழங்க முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close