மகளின் தலையை துண்டாக வெட்டி கையில் எடுத்து நடந்து வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் அரண்டுபோயினர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தை சேர்ந்த சர்வேஷ் குமாரின் 17 வயது மகள், அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆவேசமடைந்த சர்வேஷ் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகளின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். அதன்பிறகு மகளின் தலையை கையில் பிடித்தபடி சாலையில் நடந்து சென்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அரண்டுபோயினர். உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இரண்டு காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சாலையில் சலனமில்லாமல் நடந்து சென்ற சர்வேஷ் குமாரை மொபைலில் வீடியோ எடுத்தபடி போலீசார் விசாரித்தனர். பெயர் என்ன, எங்கிருந்து வருகிறார், யாருடைய தலையை கையில் வைத்திருக்கிறார் உள்ளிட்ட விவரங்களை கேட்டனர். எல்லா கேள்விகளுக்கும் சற்றும் தடுமாற்றம் இல்லாமல் பதில் அளித்தார் சர்வேஷ் குமார்.
தனது மகளின் காதல் விவகாரம் பிடிக்காததால் அவரின் தலையை வெட்டி எடுத்துவிட்டதாக சர்வேஷ் குமார் ஒப்புக்கொண்டது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. அவர், “நான் தான் செய்தேன். யாருமே அப்போது அங்கு இல்லை. அறையில் உடல் கிடக்கிறது” என்று கூறுகிறார். பின்னர் சர்வேஷ் குமாரை பிடித்துச்சென்ற போலீசார், அவர்மீது கொலை வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
பெண்களுக்கெதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேச மாநிலம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்றப் பதிவாணையத்தின் தகவல்கள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கொரோனா போராளிகளுக்கு ஏப்.24-க்குப் பிறகு புதிய காப்பீட்டு பாலிசி!
இரவு நேர ஊரடங்கால் ஆம்னி பேருந்துகள் முடக்கம் - 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
+2 பொதுத்தேர்வு அட்டவணை 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் – தேர்வுகள் இயக்ககம்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து!
டெல்லியில் ஒருவாரம் முழு ஊரடங்கு: மதுக்கடைகளில் அலைமோதும் கூட்டம்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி