மகாராஷ்டிர மாநிலம், தானே அருகே உள்ளது மஹுலி அருவி. இது சுற்றுலா தலமாக இருக்கிறது. சீசன் நேரங்களில் காட்டுக்குள் இருக்கும் இந்த அருவிக்கு வருபவர்களின் எண்ணைக்கை அதிகரிக்கும். இந்த அருவில் இப்போது ’பாகுபலி’ படத்தில் பிரபாஸ் ஏறுவது போல ஏறி குதிப்பது இளைஞர்களின் விளையாட்டாக இருக்கிறது. இந்த விளையாட்டு வினையாகி சிலர் பலியாகியுள்ளனர். இதனால் இந்தப் பகுதிக்குட்பட்ட சகாஹபூர் போலீசாருக்குத்தான் தூக்கம் தொலைகிறது. இதையடுத்து இந்த அருவியை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுபற்றி சகாஹபூர் போலீஸ் அதிகாரி மகேஷ் கூறும்போது, ‘வருகிற இளைஞர்கள் பாகுபலி பட காட்சியை போல அருவில் ஏற முயற்சிக்கின்றனர். பாதியில் கால் தடுமாறி கிழே விழுந்து காயமடைகின்றனர். சிலர் இறந்து போய்விடுகின்றனர். சமீபத்தில் மும்பை பிவண்டியை சேர்ந்த தொழிலதிபர் இந்திரபால் படேல், அப்படி இறந்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் 2 பேர் இறந்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு ஒருவர் வீதம் காயமடைகின்றனர்’ என்றார். அருவியில் ஏறக்கூடாது என்று போலீசார் எச்சரித்தும் யாரும் கேட்பதில்லை என்கிறார் இவர். இதையடுத்து, அருவிக்கு வழியை அடைத்துவிடும் படி வனத்துறைக்கு கடிதம் எழுதியிருக்கிறார்களாம்.
Loading More post
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'