’மாநிலங்களவை சீட்டுக்காக தேமுதிக கெஞ்சவில்லை. கூட்டணிகாக அதிமுகதான் கெஞ்சுகிறது” என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், பாஜக மற்றும் தேமுதிக உடன் அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பாஜக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை கூட சுமுகமாகதான் நடைபெற்று வருவது போல் தெரிகிறது. ஆனால், தேமுதிக உடனான பேச்சுவார்த்தை இழுபறியில் செல்கிறது. கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா அல்லது வெளியேறுமா என்று விவாதம் நடைபெறும் அளவில் உள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை ஆரணி அருகே நடந்த தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சுதிஷ் "2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லையெனில் அதிமுக என்றக் கட்சியே இருந்திருக்காது. கூட்டணிக்காக அதிமுகாதன் நம்மை கெஞ்சுகிறது. மாநிலங்களவை சீட்டுக்காக நாம் கெஞ்சவில்லை. கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது.
விஜயகாந்த் தலைமையில் கூட்டணி அமைத்தால் பலக் கட்சிகள் வரத் தயாராக உள்ளன. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது தவறில்லை. ஆனால், மற்ற சாதிகள் என்ன செய்வார்கள்?” என்று கூறியுள்ளார். அவரின், இந்தப் பேச்சு அதிமுக , தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை ஏற்பட்டுள்ள நிலையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் பேசுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து பயணித்துள்ளோம். தற்போது வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் பயணிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக சுதீஷ் இவ்வாறு பேசியிருக்கிறார். தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறோம் என்ற போர்வையில் தங்களை சீண்டும் வகையில் பேசக் கூடாது. அதிமுகவிற்கு கெஞ்ச வேண்டிய அவசியமில்லை” என்று கூறினார்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!