ஜி.எஸ்.டி.க்கு பிறகு 8 சதவிகிதம் விலை குறைந்துள்ளது - அருண் ஜேட்லி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின் பொருட்களின் விலை 4 முதல் 8 சதவிகிதம் குறைந்துவிட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.


Advertisement

டெல்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அருண் ஜேட்லி, ஜி.எஸ்.டி வரிவிகிதம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. இது, தனிப்பட்ட ஒரு கட்சிக்கு கிடைத்த வெற்றியில்லை, எல்லோருக்கும் கிடைத்த வெற்றி. இதன்மூலம், வரி ஏய்ப்பு, வரி மோசடி, அதிகாரிகளின் ஊழல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 ஆம் தேதிக்கு பின் அனைத்து பொருட்களின் விலையும் 4 முதல் 8 சதவீதம் வரை குறைந்துள்ளது. எதிர்காலத்தில் ஜி.எஸ்.டியால் வளர்ச்சி அதிகரிக்கும்; வருவாய் 80 சதவிகிதம் வரை உயரும். வரிச்சுமை மிகவும் குறையும். ஜி.எஸ்.டியால் நாட்டின் வர்த்தகச்சந்தை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமான வணிகர்கள், ஜி.எஸ்.டியில் தங்களை பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.

loading...
Related Tags : arun jaitleygst

Advertisement

Advertisement

Advertisement