டெல்லி மாநகராட்சியில் 5 வார்டுகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
டெல்லி மாநகராட்சியில் 5 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 28/ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
ஆரம்பம் முதலே ஐந்தில் 4 வார்டுகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வந்தது. ஷாளிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக்புரி, ரோஹினி சி உள்ளிட்ட 4 வார்டுகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்தது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சவுஹான் பாங்கார் வார்டில் முன்னிலை வகித்து வந்தார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி 4 வார்டுகளிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாமால் தோல்வியை தழுவியது. ஏற்கெனவே இந்த 5 வார்டுகளில் 4 ஆம் ஆத்மி வசமே இருந்தது. ஷாளிமார் பாக் மட்டும் பாஜகவசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மணீஷ் சிசோடியா கூறுகையில் “டெல்லி மக்கள் பாஜக மீது நம்பிக்கை இழந்துவிட்டதையே இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 2022 டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு ஒரு இடங்கள் கூட கிடைக்காது” எனத் தெரிவித்தார்.
Loading More post
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை
வெற்று பேச்சுகள் தேவையல்ல, நாட்டிற்கு தீர்வைக் கொடுங்கள்: ராகுல் காந்தி
ஆக்சிஜன் வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
அரசின் பொறுப்பை நீதிமன்றம் சொல்லும் நிலைமை பெருமைக்குரியதா? : கமல்ஹாசன்
மேற்குவங்கத்தில் பரவும் மும்முறை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ்!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ