[X] Close >

பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ரேஸில் அஷ்வின்!

Indian-Cricketer-Ravichandran-Ashwin-Nominated-in-the-best-player-for-the-month-of-February-2021-by-the-ICC

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாதந்தோறும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்களை தேர்வு செய்து சிறப்பித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் வென்றிருந்தார். இந்த நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர்களின் பெயரை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. 


Advertisement

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அஷ்வின், வெஸ்ட் இண்டீஸ் அணியின் காய்லே மேயர்ஸ் ஆகிய வீரர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. அதன்படி ஆன்லைன் மூலமாக வீரர்களுக்கு கிடைக்கும் வாக்குகளை பொறுத்து வெற்றியாளர் யார் என்பதை ஐசிசி அறிவிக்கும். 

அஷ்வின் பேட்ஸ்மேனாக 106 ரன்களும், பவுலாராக 24 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close