தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையை மார்ச் 11 ஆம் தேதி வெளியிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக சார்பில் மார்ச் 12 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இதனால் 11 ஆம் தேதி தேர்தலுக்கான அறிக்கையை வெளியிடுவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கான திட்டம் குறித்து அந்த அறிக்கையில் அறிவிப்புகள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை திமுக அறிக்கையில் இலவச அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் அந்த அறிவிப்புகளை இந்த முறை குறைத்துவிட்டு வளர்ச்சி திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது. தமிழகம் கடனில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள், நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி அறிவிப்புகள், வேலைவாய்ப்புகள், நியமனங்கள், இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்தும் அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்? நாளை ஆலோசனை!
ஒரே நாளில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு; 1,038 பேர் உயிரிழப்பு!
இந்தியா: நேற்று ஒரே நாளில் 31.39 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்ற 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு!
90களின் பிற்பகுதியிலிருந்து கர்ணன்.. அதிருப்தி குரல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி!