முன்விரோதம் காரணமாக ராஜ்குமார் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (36). தேமுதிகவில் அனகாபுத்தூர் நகர துணை செயலாளராக இருக்கும் இவர், அதே பகுதியில் டெய்லரிங் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு தனது கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது அனாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தை வழிமறித்த இரண்டு மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக ராஜ்குமாரின் தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த சங்கர் நகர் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளிகளை சங்கர் நகர் போலீசார் தேடி வருகின்றனர்.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்