பல வெளிநாடுகளை ஒப்பிடும்போது இந்தியர்களுடைய உணவில் அதிகம் சர்க்கரை உணவுகள் இடம்பெறுவது வழக்கம். அதனால் பெரும்பாலானவர்களுக்கு 45 வயதுக்குமேல் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களும் கூடவே வந்துவிடுகிறது.
அதில் நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலான உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் அதிக நார்ச்சத்து, கொழுப்பு நீக்கப்பட்ட பால், மோர், பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் என அனைத்தும் இடம்பெற வேண்டும். ஆனால் அவை சரியான முறையில், சரிவிகித அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர். டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டுவகையான நீரிழிவு நோயாளிகளுமே கீழ்க்கண்டவற்றை பின்பற்றலாம்.
இந்திய நீரிழிவு நோயாளிகள் கடைபிடிக்கவேண்டியவை:
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை 100மிலி தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து அதை மறுநாள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தக்காளி ஜூஸுடன் உப்பும், மிளகும் சேர்த்து காலை வெறும்வயிற்றில் குடிக்கவேண்டும்.
இரவுமுழுவதும் ஊறவைத்த பாதாமை தினசரி காலை 6 சாப்பிட்டு வரலாம்.
கோதுமை, ஓட்ஸ், சுண்டல், சிறுதானியங்கள் மற்றும் பிற நார்ச்சத்துமிக்க உணவுகளை தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை நூடுல்ஸ் அல்லது பாஸ்தா சேர்த்துக்கொள்ள விரும்பினால் அதை காய்கறிகள் அல்லது முளைக்கட்டிய தானியங்களுடன் தான் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். எனவே காலையும், மாலையும் பால் டயட்டில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.
பட்டாணி, பீன்ஸ், ப்ரக்கோலி மற்றும் கீரைகளில் ஏதேனும் ஒன்று தினசரி உணவில் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். அதனுடன் முளைக்கட்டிய தானியங்களும் இடம்பெற்றால் சிறந்தது.
பருப்புவகைகள் டயட்டில் முக்கியம். ஏனென்றால் இது கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள உணவுகளைக் காட்டிலும், ரத்தத்தில் குறைந்த அளவே சர்க்கரை சேர அனுமதிக்கிறது. காய்கறிகள் மற்றும் பருப்பு நிறைந்த டயட்டானது ரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
நல்ல கொழுப்புகல் என்று சொல்லக்கூடிய ஒமேகா 3 மற்றும் MUFA ஆகியவையும் நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்யத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. கடுகு எண்ணெய், ஃப்ளேக்ஸ் விதை எண்ணெய் மற்றும் கொழுப்பு மீன்கள் மற்றும் உலர் கொட்டைகளை எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் கெட்ட கொழுப்புகள் மிகவும் குறைவு.
பப்பாளி, ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், கொய்யாப்பழம் போன்ற நார்ச்சத்துமிக்க பழங்கள் டயட்டில் இடம்பெற வேண்டும். மாம்பழம், வாழை மற்றும் திராட்சை போன்றவற்றில் சர்க்கரை அதிமாக இருப்பதால் அவற்றை தவிர்ப்பது சிறந்தது.
நீரிழிவு நோய் வந்துவிட்டாலே சிலர் பயத்தால் பல உணவுகளை அறவே தவிர்த்துவிடுகிறார்கள். ஆனால் உடலின் தன்மையை பரிசோதித்து, எந்த உணவை எதனுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று நிபுணர்களின் அறிவுரைப் பெற்று அதன்படி அனைத்து உணவுகளையும் சரியான முறையில் சேர்த்துக்கொள்வது சர்க்கரை கட்டுக்குள் வைப்பதோடு உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்