[X] Close >

கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் பாமக, தேமுதிகவின் வாக்கு சதவீதம்

Percentage-of-votes-of-PMK-and-DMDK-in-the-last-parliamentary--assembly-elections

பாமக தொடங்கப்பட்ட 31 ஆண்டுகளில் ஆறு சட்டமன்ற தேர்தல்களையும், ஏழு நாடாளுமன்ற தேர்தல்களையும் சந்தித்துள்ளது.


Advertisement

தேமுதிக கட்சி தொடங்கி 16 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் 3 சட்டமன்ற தேர்தல்களிலும், 3 நாடாளுமன்ற தேர்தல்களிலும் களம் கண்டுள்ளது. 2006 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை பாமகவின் வாக்கு சதவீதம் 5.65. திமுக கூட்டணியில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களை கைப்பற்றியது. 2005இல் கட்சி தொடங்கிய விஜயகாந்த், முதன்முதலில் 2006 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8.4 சதவீத வாக்குகளை கைப்பற்றினார். அந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.

2009 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக ஆறு இடங்களில் களம் கண்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது. பெற்ற வாக்கு சதவீதம் 6.8. 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட தேமுதிக 10.3 சதவீத வாக்குகளை வசப்படுத்தியது.


Advertisement

image

2011 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக 5.2 சதவீத வாக்குகளை கைப்பற்றி வெறும் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று 7.9 சதவீத வாக்குகளை அறுவடை செய்தது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயகாந்த், எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் பாமக 4.4 சதவீத வாக்குகளையும், தேமுதிக 5.1 சதவீத வாக்குகளையும் பெற்றன. 2016 சட்டமன்ற தேர்தலில் பாமக 5.3 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால், அந்த தேர்தலில் தேமுதிவுக்கு சரிவு ஏற்பட்டது. வெறும் 2.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாமக 5.4 சதவீத வாக்குகளையும், தேமுதிக 2.2 சதவீத வாக்குகளையும் பெற்றன. இந்நிலையில் பாமக தனது வாக்கு சதவீதத்தை இந்த முறையும் தக்க வைக்குமா, 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட சரிவில் இருந்து தேமுதிக எழுச்சி பெறுமா என்பது தற்போது இருக்கும் மிகப்பெரிய கேள்வி.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close