[X] Close >

தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?

dmdk-dissatisfied-with-AIADMK

தொகுதி பங்கீடு குறித்து இன்று அதிமுகவுடன் ஆலோசிக்க இருந்த நிலையில் உரிய முக்கியத்துவம் தரவில்லை என தேமுதிக அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதிமுக தனது கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்குவதாக உடன்பாடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி முதல்கட்ட பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 12 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறப்பட்டது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் 15 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என அதிமுக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

image


Advertisement

ஆனால் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட அளவு தொகுதிகள் ஒதுக்கவேண்டும் எனவும் குறைந்தது 20 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என தேமுதிக கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. விஜயகாந்த் போட்டியிடாததால் தேமுதிக வாங்கு வங்கி குறைவாக இருப்பதை காரணம் காட்டி அதிமுக மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே 3ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தேமுதிகவினர் வராமல் புறக்கணித்தனர். அதிமுக மீது தேமுதிகவினர் அதிருப்தியில் இருப்பதால் இந்த கூட்டணி நிலைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close