[X] Close >

பாஜக ஆட்சியை அகற்றுவது கடினமான செயல் அல்ல: ராகுல் காந்தி

Removing-the-BJP-regime-led-by-Prime-Minister-Modi-is-not-a-difficult-task--Rahul-Gandhi

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்றுவது கடினமான செயல் அல்ல என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.


Advertisement

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, புளியங்குடி உள்ளிட்ட தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில திறந்த வாகனத்தில் இருந்தவாறு பரப்புரை செய்தார். 74 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை குறிப்பிட்ட அவர், அதேபோன்று பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் என தெரிவித்தார்.

கல்வி, சுகாதாரத்தை பாகுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வலியுறுத்தினார். பரப்புரையின்போது, கடைக்கு சென்று தேநீர் அருந்திய அவர், அங்கிருந்த சிறுமியுடன் சிறிது நேரம் பேசினார். பாவூர்சத்திரம் பகுதியில் ஆதரவு திரட்டிய ராகுல்காந்தி, காரில் இருந்து இறங்கி சாலையோர வியாபாரியிடம் இளநீர் வாங்கி அருந்தினார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close