தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் வருகிற 2-ஆம் தேதி வெளியாக உள்ளது.
‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணியாற்றும் இந்தப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அண்மையில் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘கண்டா வரச்சொல்லுங்க.. கர்ணனை கையோட கூட்டி வாருங்க’ என்ற பாடல் வெளியிடப்பட்டது.
நாட்டுப்புறப் பாடகி கிடக்குழி மாரியம்மாளின் குரலில் வெளியான இந்தப்பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்பாடல் முன்னதாகவே தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் என்பவர் வெளியிட்ட பாடல் என்பதால், பாடலின் தொடக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவரின் குடும்பத்திற்கு படக்குழு எந்தவித தொகையையும் வழங்கவில்லை என குற்றசாட்டு எழுந்தது.
இந்நிலையில் தற்போது கர்ணன் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வரும் மார்ச் 2 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அதற்கான வெளியிடப்பட்ட போஸ்டர் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Loading More post
விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை - சிம்ஸ் மருத்துவமனை விளக்கம்
வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் விறுவிறுப்பான மறு வாக்குப்பதிவு!
மேற்கு வங்கம் : தொடங்கியது 5ஆம் கட்ட வாக்குப்பதிவு
5 முறை சிறந்த காமெடியன்; 3 முறை பிலிம்ஃபேர் : நகைச்சுவையில் முத்திரை பதித்த விவேக்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்