[X] Close >

கர்நாடகா: 18 மணி நேரத்தில் உருவான 25 கி.மீ. சாலை - மத்திய அமைச்சர் பாராட்டு

NHAI-constructs-25-km-road-in-a-record-18-hour-time

கர்நாடகாவில் 18 மணி நேரத்தில் 25 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைத்த சாதனை நிகழ்வு ‘லிம்கா’ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.


Advertisement

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தில் இருந்து சோலாப்பூருக்கு 110 கிலோ மீட்டருக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் விஜயாப்புராவில் இருந்து 25.54 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலையை 18 மணிநேரத்தில் அமைத்து தொழிலாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

image


Advertisement

இந்த சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், 25 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலையை நவீன தொழில்நுட்பத்துடன், 18 மணிநேரத்தில் அமைத்து முடிக்க 500 தொழிலாளர்களை பயன்படுத்தி இருந்தது. இந்த சாதனை, ‘லிம்கா’ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, லிம்கா புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இந்த சாதனையை மத்திய அமைச்சர் நிதிக் கட்கரி பாராட்டியுள்ளார். மேலும் அவர், 'விஜயாப்புரா – சோலாப்பூ இடையிலான நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு பெறும்' என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close