35 வயது மதிக்கத்தக்க நபரை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய கொடூரம். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கீரனூரை சேர்ந்தவர் காய்கறி வியாபாரி தண்டபாணி (35). இவர், தனது மனைவி தேவியுடன் (33) திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வசித்துவந்தார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 17 நாட்களாக தண்டபாணியை காணவில்லை என அவரது உறவினர்கள் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை புதிய மேம்பாலம் அருகே உள்ள கிணற்றில், சாக்கு மூட்டையில் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக தாராபுரம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் உதவியுடன் கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கொலைச் சம்பவம் குறித்தும், கொலை எதற்காக செய்யப்பட்டது, கொலை செய்தவர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading More post
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பெங்களூரூ: எரியூட்ட சடலத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்