அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டம், 3ஆவது நாளாக நீடிக்கிறது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து துறை செயலாளரோ, அதிகாரிகளோ தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என நிர்வாகிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 3 வது நாளாக தொடரும் நிலையில் பல்வேறு மாவட்டஙகளில் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போக்குவரத்து தொழிலாளர்களை தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இன்று மாலை 3 மணிக்கு தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
Loading More post
இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.32 லட்சம் ஆக உயர்வு
டெல்லி: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் பலி; அபாயத்தில் 60 பேர்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? - கருத்துக்கேட்பில் வாக்குவாதம்
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை