தமிழக நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் அறிவித்தார். அதன்படி தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
“ கொரோனா காலம் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தேர்தல் நடத்துகிறோம். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தலை நடத்துவதில் மருத்துவர்கள், ஊழியர்கள் , செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பெரும் பங்கு இருக்கிறது. தேர்தலுக்காக தமிழகத்தில் 88,936 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் தரைத்தளத்தில் இருப்பதை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.”என்றார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021
தேர்தல் நாள்: ஏப்ரல் 6
வேட்புமனு தாக்கல் தொடக்கம்: மார்ச் 12
வேட்புமனு தாக்கல் நிறைவு: மார்ச் 19
வேட்புமனு பரிசீலனை: மார்ச் 20
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 22
வாக்கு எண்ணிக்கை:மே 2
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!