[X] Close >

திமுகவின் வெற்றியைத் தடுக்க பல்வேறு சூழ்ச்சிகள் நடக்கிறது: தொண்டர்களிடம் ஸ்டாலின் பேச்சு

Various-maneuvers-to-prevent-the-success-of-DMK-says-stalin

திமுகவின் வெற்றியைத் தடுக்க பல்வேறு சூழ்ச்சிகள் நடந்து வருவதாகவும், வெற்றியை சுலபமாக பெற்று விட முடியாது என்றும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான சென்னை - கொளத்தூரில், திமுக சார்பில் 'இலக்கும்-நோக்கும் 234' என்ற தலைப்பில், பூத் கமிட்டி உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, கொளத்தூர் தொகுதி திமுக களப்பணியாளர்களுக்கு தேர்தல் பணிப் பொருள்களை வழங்கினார்.

முன்னதாக உரையாற்றிய ஸ்டாலின், திமுக சுலபமாக வெற்றி பெற்றிட முடியாது என்று தொண்டர்களுக்கு எச்சரித்தார். மேலும், “திமுகவை எதிர்க்கக்கூடியவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. பாஜகவுடன் சில அதிகாரிகளும் திமுகவை எதிர்க்கிறார்கள். சில அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசுகின்றனர்” எனத் தெரிவித்தார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close