15 நாட்களில் பத்து பகுதிகளில் 26 இடங்களில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவங்கள், ரஞ்சன்குடியில் நடந்த முகமூடிக்கொள்ளையர் அட்டகாசம் என அதிர்ந்து போயிருக்கிறது பெரம்பலூர். தொடர் கொள்ளைகளில் துப்பு துலங்காத நிலையில் இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்
பிப்ரவரி மாதம்10 ஆம் தேதி வேப்பந்தட்டையில் 2 கடைகளில் திருட்டுகள் நடந்தன. அடுத்து 15 ஆம் தேதி மங்களமேடு மற்றும் கிருஷ்ணபுரத்திலும், 16 ஆம் தேதி வேப்பந்தட்டையில் 9 கடைகளிலும் கொள்ளைகள் அரங்கேறின. 18 ஆம் தேதி அன்னமங்கலத்தில் ஐந்து வீடுகளில் திருட்டு முயற்சியும் ஒரு வீட்டில் பணத்திருட்டும் நடந்தது. அதேநாளில், பாலக்கரையில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணம் திருடப்பட்டது. 19,20,22,23 என அடுத்தடுத்த தேதிகளில் இங்கு கொள்ளைகள் அரங்கேறின. ரஞ்சன்குடி கிராமத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே தனித்தனியாக இருந்த வீடுகளை நோட்டமிட்டு நள்ளிரவில் புகுந்த கும்பல், ஆயுதங்களால் தாக்கி கொள்ளையடித்துச்சென்றனர். பணத்தை, நகைகளை பறிகொடுத்தவர்கள் அச்சத்துடன் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
இந்தியன் வங்கி கொள்ளை முயற்சியில் கொள்ளையனின் சிசிடிவி புகைப்படம் கிடைத்தும் இதுவரை பிடிபடவில்லை. இத்தனை கொள்ளைகளிலும் இதுவரை குற்றவாளிகள் பிடிபடவில்லை என்பதால் அடுத்த கொள்ளை அரங்கேறும் முன்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் பெரம்பலூர் மக்கள்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்