[X] Close >

கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை

In-Coimbatore--Prime-Minister-Modi-launched-projects-worth-Rs-12-400-crore-

கோவையில், ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.


Advertisement

சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் கோவை வந்த பிரதமருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர். அங்கிருந்து நிகழ்ச்சி நடைபெறும் கோவை கொடிசியா அரங்கத்திற்கு பிரதமர் மோடி காரில் வந்தடைந்தார்.

பின்னர், மேடைக்கு சென்ற பிரதமர் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பிரதமருக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர்.


Advertisement

image

இதையடுத்து கீழ் பவானி திட்டத்தை விரிவு படுத்துதல், புதுப்பித்தல் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை திறந்து வைத்தார். நெய்வேலியில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் உள்ளார். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலத்தையும் தொடங்கி வைத்தார். கோவை, மதுரை, சேலம், தஞ்சை, திருப்பூர் உட்பட 9 ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.

நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ் எண்ணிலடங்கா திட்டங்களை அள்ளித்தரும் பண்பின் பெட்டகம் மோடி என புகழாரம் சூட்டினார். 


Advertisement

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close