[X] Close >

கமலுக்கு அரசியல் தெரியாது - முதல்வர் பழனிசாமி கருத்து

Kamal-does-not-know-politics--Chief-Minister-Palanisamy

நடிகர் கமலஹாசனுக்கு அரசியல் தெரியாது என்றும், அரசியலுக்கு வந்த பின் அவர் புகார் கூறினால் அதற்கு பதிலளிக்க தயார் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


Advertisement

சட்டசபை தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றியுள்ளோம். சட்டசபை சிறப்பாக நடந்தது. இந்த சட்டசபையில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டள்ளது. அது செயல்படுத்தப்பட்டு ஏழை, எளிய மக்கள் வசதியாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் கமல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "அவர் நன்றாக நடிக்கிறார். அரசியல் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அரசியலுக்கு அவர் வந்த பிறகு புகார் சொன்னால் அதற்கு பதில் சொல்கிறோம்" என்றார். எதிர்க்கட்சிகள் எப்படி நடந்து கொண்டனர் என்பதை, சட்டசபையில் இருந்த பத்திரிகையாளர்கள் தெரிந்து கொண்டதாக கூறிய அவர், அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்பு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close