புகாரளிக்கச் சென்ற பெண் எஸ்பியை இரண்டு காவல் அதிகாரிகள் தடுத்ததாக புகார் எழுந்திருக்கிறது.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இதனிடையே புகார் கொடுக்கச் சென்ற பெண் எஸ்பியை செங்கல்பட்டை அடுத்த சுங்கச்சாவடியில் வைத்து தடுத்ததாக மாவட்ட எஸ்பி ஒருவர் மீதும், ஐஜி ஒருவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதுதொடர்பாக விசாகா கமிட்டி விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அந்த பெண் எஸ்பி தனது புகாரிலும் இதுகுறித்து தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே அந்த எஸ்பி மற்றும் ஐஜியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே தமிழ்நாடு ஐபிஎஸ் அசோஸியேஷன் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் பாலியல் தொல்லையில் ஏற்கெனவே சிக்கியுள்ள ராஜேஸ் தாஸிடம் விசாரணையை நேர்மையாக நடத்தப்படவேண்டும் எனவும், விரிவான, நேர்மையான விசாரணையை நடத்த விசாரணை கமிட்டிக்கு ஐபிஎஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை