[X] Close >

ராகுலிடம் பொய் சொல்லி ஏமாற்றியவர் நாராயணசாமி -பிரதமர் மோடி

Narayanasamy-lied-to-Rahul-and-deceived-him-says-modi

ராகுல்காந்தியிடம் தவறாக மொழிப்பெயர்த்து ஏமாற்றியவர் நாராயணசாமி என பிரதமர் மோடி தெரிவித்தார்.


Advertisement

அண்மையில் புதுச்சேரி வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீனவப்பகுதி மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது புயலின்போது முதல்வர் நாராயணசாமி இந்த பக்கமே வரவில்லை என மீனவ பெண் ஒருவர் ராகுலிடம் புகார் தெரிவித்தார். ஆனால் மொழிப்பெயர்த்து கொண்டிருந்த அப்போதைய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புயலின்போது நான் பார்வையிட்டதாக அந்த பெண் கூறுகிறார் என்று தவறாக மொழிப்பெயர்த்தார். இதுகுறித்து வீடியோ வைரலாக பரவியது.

image


Advertisement

இந்நிலையில் இன்று புதுச்சேரியில் பிரதமர் மோடி 4 புது திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, “பொய் சொல்வதில் அனைத்து பதக்கங்களையும் பெற்றவர்கள் காங்கிரஸ்காரர்கள். மீனவ பெண் கூறிய புகாரை தவறாக மொழிப்பெயர்த்து ராகுல்காந்தியை ஏமாற்றியவர் நாராயணசாமி. பரம்பரை அரசியல் நாடு முழுவதும் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் தற்போது காற்று மாற்றி வீசி வருகின்றது. மாநில மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். காங்கிரஸ் பிரிவினைவாத அரசியல் செய்கிறது. வர்த்தகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா, ஆகியவற்றில் புதுச்சேரி சிறந்து விளங்கும்” எனத் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close