[X] Close >

மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..

Prime-Minister-Modi-again-quoted-Thirukural

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கருத்தரங்கில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.


Advertisement

புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமையும் 4 வழிப்பாதை, சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான சாலை பணிகள், புதுவை துறைமுகத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் சிறிய துறைமுக மேம்பாட்டு பணி, காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிட பணிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

அப்போது விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், 'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார். மோடி இதைக் கூறியதும் கூட்டத்தில் பலத்த கரவொலி எழுந்தது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close