[X] Close >

பாதி ஆண்; பாதி பெண்; இது அதிசயத்திலும் அதிசயம்- கேமராவில் சிக்கிய அரியவகை சிவப்புக்குருவி!

Rare-cardinal-bird-that-is-half-male-and-half-female-clicked-by-photographer

பாதி ஆண்குருவி போலவும், மறுபாதி பெண் குருவி போலவும் தென்பட்ட அரிய வகை கர்தினால் குருவியை புகைப்படக்காரர் தன்னுடைய கேமராவில் க்ளிக் செய்துள்ளார்


Advertisement

கர்தினால் என்பது தென் அமெரிக்கப் பறவை ஆகும். இது சிவப்புக்குருவி என அழைக்கப்படுகிறது. இப்பறவை கனடா, கிழக்கு ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. இந்த வகை பறவைகளில் ஆண் குருவி சிவப்பாகவும், பெண் குருவி சாம்பல் நிறத்திலும் இருக்கும்.

image


Advertisement

ஆனால் 10 லட்சத்தில் ஒரு பறவை அரியவகையாக ஆணும், பெண்ணும் கலந்ததுபோல காட்சியளிக்கும். அதாவது ஒரு பாதி சிவப்பாகவும், மறுபாதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். இந்த அரியவகை பறவையை காண்பது மிகவும் கடினம். ஆனால் அப்படி ஒரு அதிசயம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

image

அமெரிக்காவின் கிராண்ட் வேலி பகுதியில் அரியவகை சிவப்புக்குருவியை கண்டுள்ளார் பறவை ஆர்வலர் ஜேம்ஸ் ஆர் ஹில். 48 வருடங்களாக பறவை குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறேன். ''என் கண்ணில் இந்த அரியவகை சிவப்புக்குருவி தென்பட்டதே இல்லை. இது வழக்கத்திற்கு மாறான அழகு. இது வாழ்க்கையில் ஒருமுறையே கிடைக்கும் வாய்ப்பு'' எனவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close