[X] Close >

சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!

A-teenager-who-made-a-16-year-old-girl-pregnant-in-Chennai-has-been-arrested-under-the-pocso-act

சென்னையில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

சென்னை புழல் பகுதியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமி, பெரம்பூர் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அங்கு வேலை பார்த்து வந்த சாந்தகுமார் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனால், சிறுமி கர்ப்பம் அடைந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து, புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட தகவலையடுத்து, சாந்தகுமாரை கைது செய்த மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close