[X] Close >

பிரதமர் மோடி இன்று தமிழகம், புதுச்சேரி வருகை

Prime-Minister-Modi-to-visit-Chennai-today

தேர்தல் பரப்புரை மற்றும் பல்வேறு திட்டங்களை தொடக்கிவைக்க ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி இன்று சென்னை வரவிருக்கிறார்.


Advertisement

காலை 7.45 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் அவர், 10.25 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்து சேருகிறார். அங்கிருந்து 10.30 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் 11.20 மணி அளவில் புதுச்சேரி சென்றடைகிறார். புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்த பிறகு 1.20 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 2.10 மணி அளவில் மீண்டும் சென்னை வரும் அவர், 2.15 மணி அளவில் விமானம் மூலம் கோவை புறப்படுகிறார்.

அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், 5 மணி அளவில் கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் சாலை வழியாக விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, 6 மணி அளவில் டெல்லி திரும்புகிறார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close