ஆர்யா நடித்துள்ள ’டெடி’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது
நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன்,டிக் டிக் டிக் படங்களை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் அவர் பாணியிலேயே அடுத்ததாக ‘டெடி’ படத்தை இயக்கியிருக்கிறார். ஆர்யா, சாயிஷா நடித்துள்ள 'டெடி' இப்படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வரும் மார்ச் 19 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. முதலில் மாலை 4.30 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், தாமதமாக தற்போதுதான் வெளியிட்டிருக்கிறார்கள். இது த்ரில்லர் படமா? அல்லது பேய் படமா? என்று நம்மை சிந்திக்கவைத்து திகிலூட்டி எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிறது ட்ரைலர். ஆனால், மருத்துவத்துறைச் சார்ந்த த்ரில்லர் படம் என்பது மட்டும் ட்ரைலர் உறுதிப்படுத்துகிறது. பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக மிரட்டியிருக்கிறார்.
மேலும், இப்படத்தில் சதீஷ், கருணாகரன், சாக்ஷி அகர்வால் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?