தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறைக்கான நிதி ஒதுக்கீட்டு அறிவிப்புகள், மத்திய அரசு மீதான சில குற்றச்சாட்டுகள் அடங்கிய இந்த பட்ஜெட் உரையில் சில விஷயங்கள் கவனிக்க வைத்தன.
2 மணி 32 நிமிடங்கள் நீடித்த இந்த பட்ஜெட் உரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் நான்கே நான்கு இடங்களில் மட்டும் குறிப்பிடப்பட்டது. பட்ஜெட் உரையின் தொடக்கத்தின்போதும், பின்னர் தமிழக அரசு, மத்திய அரசு விருதுகளை வாங்கியது தொடர்பாக பேசும்போதும், அடுத்தமுறையும் அதிமுக அரசே அமையும் என்று சொன்னபோதும், அதேபோல், பட்ஜெட் உரை தயாரிக்க உறுதுணையாக இருந்ததற்காக நன்றி தெரிவிக்கும்போது மட்டும் 'எடப்பாடி பழனிசாமி' பெயர் பயன்படுத்தப்பட்டது. மற்ற இடங்களில் எல்லாம் அவரைக் குறிப்பிடும்போது, 'மாண்புமிகு முதலமைச்சர்' என்பதோடு ஓபிஎஸ் முடித்துக்கொண்டார். ஓர் இடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 'விவசாயி' எனக் குறிப்பிட்டு பேசினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் உரசல்கள் இருப்பதாக பேசப்பட்டு வரும் நிலையில், அவரின் பெயர் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டதா என்று பேச்சுக்கள் எழுந்துள்ளது. எனினும், ஜெயலலிதாவை நினைவுகூரும் விதமாக, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, மாண்புமிகு அம்மா என்று 28 முறை குறிப்பிட்டு பேசினார் ஓபிஎஸ்.
அதேநேரத்தில், பட்ஜெட் உரையில் ``நான்'' என்று தன்னை முன்னிறுத்துவதிலும் ஓபிஎஸ் கவனம் செலுத்தினார் என்பதை அறியமுடிகிறது. `நான் கேட்டுக்கொண்டேன்', `நான் மகிழ்ச்சி அடைகிறேன்', `நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்'. `நான் எதிர்பார்க்கிறேன்', `நான் நம்புகிறேன்' என்று எட்டு இடங்களில் தன்னை முன்னிறுத்தி பேசினார். பட்ஜெட் உரையின் தொடக்கத்தின் போது,
‘கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு’
என்ற திருக்குறளையும், முடிவின்போது...
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.' என்ற திருக்குறளையும் மேற்கோள்காட்டி பேசினார் துணை முதல்வர் ஓபிஎஸ்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி