இந்தியாவில் எம்.வி. ஆகஸ்டா நிறுவனத்தின் புதிய புரூடேல் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.15.59 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியை சேர்ந்த பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான எம்.வி. ஆகஸ்டா புதிய புரூடேல் 800 பைக்கினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.15.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய பைக் மோட்டோ ராயல் விற்பனை மையங்கள் மூலம் விளம்பரம் செய்யப்படுகிறது. அடுத்த மாதம் முதல் விநியோகம் செய்யப்பட இருக்கும் 800சிசி பைக் கவாசகி Z900 மற்றும் டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் 765 எஸ் பைக்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முந்தைய புரூடேல் மாடலை விட நீண்ட வீல்பேஸ், மாற்றியமைக்கப்பட்ட சேசிஸ் உள்ளிட்டவை புதிய மாடலில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்ஜின் பிரேக் கண்ட்ரோல் வழங்க MVICS, 8-லெவல் டிராக்ஷன், 3-லெவல் ABS உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள்களில் பைரெளி டையப்ளோ ரோசோ III டையர்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய மாடல்களில் இருந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் இதன் முன்பாகத்தில் திரை மற்றும் ஸ்விட்ச் கியர் வழங்கப்பட்டுள்ளது.
எம்.வி. ஆகஸ்டா புரூடேல் 800 மாடலின் இன்ஜின் முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய இன்ஜினில் 11,500rpm செயல்திறன் கொண்ட 110PS மற்றும் அதிகபட்ச டார்கியூ 7,600rpm ஆக இருக்கிறது. முந்தைய மாடலை விட இது 25 சதவிகிதம் அதிகம் ஆகும். இதன் இன்ஜினில் கவுன்ட்டர்-ரொட்டேடிங் கிரான்க்ஷிப்ட் வழங்கப்பட்டுள்ளதால் வளைவுகளில் ஏற்படும் அதிர்வுகள் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை