[X] Close >

’12,000 புதிய பேருந்துகள் டு கோவை மெட்ரோ ரயில்’ : பட்ஜெட்டில் உரையில் புதிய அறிவிப்புகள்

Interim-Budget-New-Announcements-for-the-Shamans

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணைமுதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதில் சாமானியர்களுக்கான புதிய அறிவிப்புகள் என்னென்ன உள்ளது என்று பார்க்கலாம்.


Advertisement
  • 1. ஆறாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 2. கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படுகிறது. அதற்கான அய்வும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 3. சில ஆண்டுகளில் புதிதாக 12 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதில் 2,500 பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

  • 4. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் தெரிவித்திருப்பதாகவும் உலக வங்கிகளிடம் இந்த திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 5. அம்மா விபத்து காப்பீடு திட்டத்தின் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயற்கை மரணம் என்றால் 2 லட்சம் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிரந்தர இயலாமைக்கும் 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 6. கனடாவில் டொரண்டோ பல்கலை கழகத்திலும் தமிழ் இருக்கை அமைத்திட உதவித்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close