தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக தனது கணிப்பை பிரதமர் மோடி வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்தத் தேர்தல் ஜுரம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துவிட்டது. இப்போது இருந்தே அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டன. தேர்தல் தேதி அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி என்கிற ரீதியில் செயல்பட தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் தேதி மார்ச் 7-ல் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை பிரதமர் மோடியே சூசகமாக தெரிவித்து இருக்கிறார். பிரதமர் மோடி நேற்று அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் செய்து நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அசாமில் உள்ள தேமாஜியில் ஒரு விழாவில், 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து எரிசக்தி மற்றும் கல்வி உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்த பின் பேசிய மோடி, ''கடந்த தேர்தலில், தேர்தல் தேதிகள் மார்ச் 4 அன்று அறிவிக்கப்பட்டன. இந்த முறையும் மார்ச் முதல் வாரத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என நான் நம்புகிறேன். தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் வேலை செய்து வருகிறது.
அநேகமாக தேர்தல் தேதிகள் மார்ச் 7 அன்று அறிவிக்கப்படலாம். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, நான் அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நாடுகளுக்கு முடிந்தவரை சுற்றுப்பயணம் செய்வேன். வரும் தேர்தலில் பாஜக வெற்றிவாகைசூடி நிச்சயம் ஆட்சியமைக்கும். வெற்றியின் மூலம் உண்மையான மாற்றத்தை கொண்டு வந்து இளைஞர்களின் லட்சியத்தை நிறைவேற்றுவோம்" என்று பேசினார்.
தொடர்ந்து பேசியவர், ''அசாம் மாநிலத்தில் பெரும் ஆற்றல்கள் இருந்தபோதிலும், இதற்கு முன்பு ஆண்ட அரசுகள் அவற்றை பயன்படுத்திக்கொள்வதில் அக்கறை காட்டவில்லை" என்று விமர்சித்தார். இதற்கிடையே, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்து வரும் மோடி வரும் 25ஆம் தேதி கோவை வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை