[X] Close >

"கண்டா வரச்சொல்லுங்க" 6 மில்லியன் வியூ ! புதிய போஸ்டர் வெளியீடு

Karanan-Kanda-Vara-sollunga-crossed-6-million-views

தனுஷின் 'கர்ணன்' படத்திலிருந்து வெளியாகியுள்ள ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடலை யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களில் ஃபர்ஸ்ட் சிங்கிளை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது படக்குழு.

image


Advertisement

கண்டா வரச்சொல்லுங்க.. கர்ணனை கையோட கூட்டி வாருங்க’ என்று கிடக்குழி மாரியம்மாளின் நாட்டுப்புறக் குரலோடு சேர்ந்து தனது இசையையும் குரலையும் சேர்த்து உயிரூட்டுகிறார் சந்தோஷ் நாராயணன். கும்மிருட்டில் பறையிசை அதிர பாடல் பதிவை நடத்தி பாராட்டுகளை குவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.


Advertisement

தீப்பொறியுடன் தனுஷ் புகைப்படத்தை சுவற்றில் வரைந்து கொண்டே பாடல் பதிவு செய்த காட்சி வித்தியாசமானதாகவும் கிரியேட்டிவிட்டியாகவும் இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள் ரசிகர்கள். முதல் சிங்கிள் பாடலிலேயே தீப்பொறி பறப்பதால் அசுர எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்தப் பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. மேலும் இப்பாடலை 6 மில்லியன் பேர் பார்த்திருப்பதாகவும் படக்குழு தெரிவித்து, தனுஷின் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தப் பாடலை லைக் செய்துள்ளார்கள் எனவும் அந்தப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close