ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் கருவறைக்குள் காஞ்சி சங்கர விஜயேந்திரர் நுழைய முயன்றதால் தமிழக பிராமணருக்கும் - மஹாரஸ்ட்டிர பிராமணருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழக பீடாதிபதிகளில் முக்கியமாக திகழ்பவர் காஞ்சி சங்கர விஜயேந்திரர். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் இராமேஸ்வரம் வந்திருந்தார். காஞ்சி சங்கரமடத்தில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளில் ஈடுபட்ட அவர் இன்று காலை இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை செய்து வரவேற்று அவரை கோயிலுக்குள் அழைத்து சென்றனர்.
இந்நிலையில், சுவாமி சன்னதிக்கு சென்ற விஜயேந்திரர் பூஜை செய்வதற்காக கருவறைக்கு செல்ல முயலும் போது ஏற்கனவே கருவறைக்குள் இருந்த பாரம்பரியமான மஹாராஸ்ட்டிர பிராமணர்கள் அவரை கருவறைக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். இதன்பின் தமிழ் பிராமணருக்கும் - மஹாரஸ்ட்டிர பிராமணருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.,
பின்னர் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி விஜயேந்திரரை கருவறைக்குள் அனுமதிக்கப்பட்டதையடுத்து காஞ்சி விஜயேந்திரர் சிறப்பு தீபாராதனை செய்தார். பாரம்பரியத்தை காப்பதற்காக சுவாமி சன்னதி முன் கூச்சல் குழப்பம் நிலவியது, அங்கிருந்த பலரின் மத்தியில் மனவேதனையை ஏற்படுத்தியது.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'