[X] Close >

கொரோனா டேட்டா சூப்பர் ஸ்டார்: அமெரிக்காவுக்கு உதவிய இளம் மாடல் யுயாங் குஹாத்!

Youyang-Guhad--The-27-Year-Old-MIT-Grad-Who-Became-A-Covid-Data-Superstar

ஒட்டுமொத்த உலகத்தையே புரட்டிபோட்ட கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும், கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதன் வீரியம் குறித்தும் லண்டன் இம்பீரியல் கல்லூரி மற்றும் சியாட்டலை தளமாகக் கொண்ட ஐ.எச்.எம்.இ. ஆகிய இரண்டு நிறுவனங்களும் எச்சரித்துக் கொண்டேயிருந்தன.


Advertisement

இதனிடையே, பல்வேறு மாறுபட்ட கணிப்புகளும் வெளியாகிக்கொண்டிருந்தன. ஆனால், கோடைக்காலத்தில் அமெரிக்காவில் கோவிட் 19 பெருந்தோற்றால் 2 மில்லியன் இறப்புகள் ஏற்படக்கூடும் என இம்பீரியல் கல்லூரி எச்சரித்தது. ஐ.எச்.எம்.இ (IHME) ஆகஸ்ட் மாதத்திற்குள் சுமார் 60,000 இறப்புகள் ஏற்படும் என கணித்தது. ஆனால், இந்த இரண்டு கணிப்புகளும் உண்மைக்கு மிகவும் நெருக்கமாகவே இருந்தன. ஆம்! ஆகஸ்ட் தொடக்கத்தில் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 160,000 பேர் உயிரிழந்தனர்.

அப்போது, பல்வேறு தரப்பினரின் கணிப்புகள் வெளியான நிலையில், புள்ளிவிவரங்களில் முரண்பாடுகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. இதனிடையேதான் 26 வயதான இளம் விஞ்ஞானி யுயாங் குஹாத் எனப்படும் யுயாங் கு என்னும் இளம் மாடல் கவனத்தை ஈர்த்தார். மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Massachusetts Institute of Technology) மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியலில் முதுகலை பட்டமும், கணிதத்தில் மற்றொரு பட்டமும் பெற்றவர் யுயாங் கு. ஆனால், அவருக்கு மருத்துவம் அல்லது தொற்றுநோய் தொடர்பான பகுதியில் முறையான பயிற்சியும் இல்லை. இருப்பினும் அவர் அதை முயற்சித்தார்.


Advertisement

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் மத்தியில், அவர் தனது பெற்றோருடன் கலிஃபோர்னியாவின் சாண்டா கிளாராவில் வசித்துக்கொண்டிருந்தார். அப்போது கோவிட் தொற்று இறப்புகள் குறித்து தவறான தகவல் பரவிக்கொண்டிருந்த காரணத்தால், சரியான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க முடிவு செய்தார். அதன்படி, ஒருவார காலம் தொடர் உழைப்பின் பயனாக கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிக்கும் செயல்முறையையும், வெப்சைட் ஒன்றையும் உருவாக்கினார். நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் நிதியை செலவு செய்து, பல தசாப்த கால அனுபவங்களைக் கொண்ட நிறுவனங்கள் வெளியிடும் முடிவுகளைக் காட்டிலும், யுயாங் கு-வின் முடிவுகள் துல்லியமாக இருந்தன.

"அவரது மாதிரி மட்டுமே மிகவும் துல்லியமாக கணித்தன. அறிவார்ந்த செயல்முறையாக அது இருந்தது. மற்ற மாதிரிகள் முட்டாள்தனமானவை என்று மீண்டும் மீண்டும் நிரூபித்தன. இருப்பினும் இது தொடர்பான கணிப்புகளையும், முன்னறிவிப்புகளை வெளியிடும் நிறுவனங்களிடம் எந்த உள்நோக்கமும் இருந்ததில்லை. உண்மையில் யுயாங் கு-வின் தரவுகள் சரியான தகவல்களை மக்களுக்கு அளித்தன. அது மிகவும் பயனுள்ளதாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் இருந்தது" என்று சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற தரவு நிபுணரும், ஆராய்ச்சி விஞ்ஞானியுமான ஜெர்மி ஹோவர்ட் தெரிவித்துள்ளார்.

image


Advertisement

யுயாங்-குவின் முன்னறிவிப்புகளுக்கான செயல்முறை மிகவும் எளிமையான முறையில் கையாளப்பட்டது. அவர், கோவிட் 19 சோதனை செய்யும் நபர்களின் எண்ணிக்கை, மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை, இதர பிற காரணிகளை ஆராய தொடங்கினார். அவரது புள்ளவிவரங்களை மேம்படுத்த இயந்திர கற்றல் முறை (Machine learning algorithms) பெரிதும் உதவியது. தனது கணிப்புகளை, அரசு அறிவித்த இறப்பு எண்ணிக்கையுடன் அவர், ஒப்பிட்டுக்கொண்டே இருந்தார்; மேலும் தனது இயந்திர கற்றல் மென்பொருளை தொடர்ந்து சீர்செய்தார். இதனால் அது இன்னும் துல்லியமான முன்கணிப்புகள் வரத் தொடங்கின. அவர் பெரும்பான்மையான நேரத்தை ஒதுக்கி இந்த பணியை மேற்கொண்டார். அரசியல் சார்பு மோதல்களிலிருந்தும் தனது தரவு இலவசமாக மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்று அவர் விரும்பினார்.

யுயாங் கு-வின் செயல்முறையானது ஆரம்பத்தில் இருந்தே கோவிட்19 இறப்புகளை துல்லியமாக கணித்தது. ஏப்ரல் பிற்பகுதியில், அமெரிக்காவில் மே 9-க்குள் 80,000 இறப்புகள் ஏற்படும் என அவர் கணித்தார். அதேபோல, இறப்பு எண்ணிக்கை 79,926 ஆக இருந்தது. மே 27 அன்று 100,000 இறப்புகள் ஏற்படும் என அவர் கணித்தார். அதேபோல நடந்தது.

சிறிது இடைவெளி எடுத்துக்கொண்ட பிறகு, இப்போது நியூயார்க் குடியிருப்பில் வசிக்கும் கு, மீண்டும் மாடலிங்கில் இறங்கியுள்ளார். இந்த நேரத்தில், அமெரிக்காவில் எத்தனை பேர் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு விரைவாக தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்; எப்போது நாடு மீண்டும் பழையை நிலைக்கு திரும்பும் என்பது தொடர்பான புள்ளிவிவரங்களை அவர் உருவாக்கி வருகிறார். அவரது கணிப்பின்படி, ஜூன் மாதத்திற்குள் 61% மக்கள் தடுப்பூசி செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close