புதுக்கோட்டையில் காதலியுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த காதலனை கட்டையால் அடித்துக் கொலை செய்த காதலியின் சகோதரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை பாலன் நகரை சேர்ந்த நல்லையா (23) என்ற இளைஞர் தனது வீட்டருகே உள்ள ஜான்சி என்ற பெண்ணை கடந்த ஐந்து ஆண்டு காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு காதலி ஜான்சியின் வீட்டு மாடியில் தனது காதலி ஜான்சியை நல்லையா தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஜான்சியின் அண்ணன் பிரபு இதனை கண்டு ஆத்திரமடைந்து நல்லையாவை கட்டையால் தலையில் அடித்து உள்ளார்.
இதில் படுகாயமடைந்த நல்லையா அங்கேயே மயக்கமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த நல்லையாவின் பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது அவர் உயிரிழந்த சம்பவம் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து மல்லையாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் திருக்கோகரணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜான்சியின் அண்ணன் பிரபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Loading More post
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை