[X] Close >

மழையில் மூழ்கி பாழான நெற்கதிர்கள்: வயலில் உருண்டு, புரண்டு கதறும் விவசாயி

Cuddalore-A-farmer-rolling-in-the-field-and-screaming

கடலூர் மாவட்டத்தில் 20-ஆம் தேதி இரவு 12 மணிக்கு தொடங்கி மறுநாள் 21 ஆம் தேதி பிற்பகல் 12 மணி வரை 12 மணி நேரத்தில் கடலூர் பகுதியில் 29 சென்டி மீட்டர் மழையும் ஆட்சியர் அலுவலக பகுதியில் 28 சென்டிமீட்டர் மழையும் வானமாதேவி பகுதியில் 13 சென்டிமீட்டர் மழையும் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பிப்ரவரி மாதத்தில் சில மணி நேரத்தில் வரலாறு காணாத மழையை பெய்து இயற்கை கோரத்தாண்டவம் ஆடியுள்ளது


Advertisement

இதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது பல குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது நீர்நிலைகள் நிரம்பியது விவசாய நிலத்தில் வெள்ள நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மழை நீரை அப்படியே முழுகி தத்தளிக்கிறது

இதுபோல் மணிலா உளுந்து உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் பாதிக்கப்பட்டது ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் புரவி புயல் நிவர் புயல் என இரண்டு புயல் சமயத்தில் கனமழை பெய்து மாவட்டத்தை வெள்ளக்காடாக மாறியது அதன்பிறகு ஜனவரி மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பருவம் தவறிய மழையால் மாவட்டம் மூன்றாவது முறையாக வெள்ளத்தால் சூழ்ந்தது இப்படி மூன்று முறை கடலூர் மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இதில் பல லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட நெல் மணிலா சோளம் உளுந்து கரும்பு பருத்தி உள்ளிட்ட பல பயிர்கள் அழிந்து போனது


Advertisement

இதற்கு தமிழக அரசு கணக்கெடுக்கும் பணி தொடங்கி நிவாரணம் கொடுத்தது ஆனால் அந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர் இந்நிலையில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மழை பிப்ரவரி மாதத்தில் பெய்து மீண்டும் கடலூர் மாவட்டத்தை வெள்ளக்காடாக மாற்றியது

இதனால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறதது சில நாட்களில் அறுவடை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வாங்கிய கடனை அடைக்கலாம் வீட்டுக்குத் தேவையான வற்றை வாங்கலாம் என இருந்த விவசாயிகளுக்கு மிகப்பெரிய பேரிடியாக இந்த வரலாறு காணாத கனமழை பேரழிவை ஏற்படுத்தியது

அப்படித்தான் குமளங்குளம் பகுதியில் பெய்த மழையில் விவசாய நிலம் நீரில் மூழ்கியது குமளங்குளம் பகுதியை சேர்ந்த ஜோதி என்ற விவசாயி நான்கு ஏக்கரை ஆண்டுக்கு லட்ச ரூபாய் என குத்தகை பிடித்து விவசாயம் செய்து வருகிறார் அதில் விளைந்த நெல் இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த போது மழை நிலத்தை மூழ்கடித்தது இந்த பேரழிவை எதிர்பாரத ஜோதி நிலத்தை பார்த்து கதறிக் கதறி அழுது புரண்டுள்ளார்.


Advertisement

நிலம் முழுவதும் பயிர்களை கட்டிபிடித்து கண்ணீர் விட்டு கதறியுள்ளார் பலமணி நேரமாக விழுந்து விழுந்து அழுததைப் பார்த்த அருகில் இருந்த விவசாயி ஒருவர் வீட்டு அழைத்துள்ளார் வர மறுத்து மழையில் மிதந்து கொண்டிருந்த பயிர்களை கட்டியணைத்து கதறி கதறி அழுது கொண்டிருந்துள்ளார் இதை அந்த விவசாயி செல்போனில் படம்பிடித்து அவர் குடும்பத்தாருக்கு இது குறித்து தெரிவித்துள்ளார்

அவர்கள் வந்து ஜோதியை தேற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர் வீட்டில் வைத்து நிலம் பக்கம் செல்ல வேண்டாம் என ஜோதிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் ஜோதி குத்தகை பணம் எப்படி தருவது வாங்கிய கடனை எப்படி தருவது என கதறி கதறி 12 மணி நேரத்தில் கொட்டித்தீர்த்த மழை நீரை விட அவர் கண்களில் இருந்து அதிக கண்ணீர் கொட்டி வருவதாக அவரது குடும்பத்தினரும் அவர் அருகாமையில் இருந்த மற்ற விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

இதுபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயிகளும் கடந்த மூன்று மாதங்களாக நான்கு பேரழிவை சந்தித்துள்ளனர் அரசு என்னதான் நிவாரணம் கொடுத்தாலும் இதுபோல் விவசாயிகளை மனரீதியாக இந்த பேரழிவு மனதளவில் பாதிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது

இது இப்படி இருக்க அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மழை வெள்ளத்தில் பாதித்தது ஆனால் அறுவடை செய்து அதை வாகனம் வைத்துக் கொண்டு சென்று நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக வைத்தபோது குமளங்குளம் பகுதியில் செயல்படும் நேரடி கொள்முதல் நிலையம் ஏரியில் செயல்பட்டதால் சில மணி நேரத்தில் பெய்த மழையால் அந்த ஏரி நிரம்பி அங்கு குவியல் குவியலாக வைக்கப்பட்ட நெல் மழையில் வெள்ளத்தில் நனைந்து போனது

image

இதனால் குமளங்குளம் வானமாதேவி பெத்தான் குப்பம் குப்பம் வெள்ளக்கரை உள்ளிட்ட பல கிராம விவசாயிகள் அறுவடை செய்து நேரடி கொள்முதல் வைத்தபோது வெள்ளநீர் வந்து நெல்லை மூழ்கடித்தது இப்படி வானமாதேவியின் வைக்கப்பட்டிருந்த நெல் குவியலும் நனைந்தது குமளங்குளம் வானமாதேவி பகுதியில் செயல்படும் நேரடி கொள்முதல் நிலையங்களில் மட்டும் இந்த சோகம் இல்லை கடலூர் மாவட்டத்தில் 126 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படுகிறது இவை அனைத்தும் விவசாய நிலத்தில் அல்லது திறந்த வெளியிலும் செயல்படும் கொள்முதல் நிலையங்கள் இதனால் ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையால் நனைந்துள்ளது

அரசு 20 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் கொள்முதல் செய்யலாம் என ஆனையுள்ளது ஆனால் அனைத்தும் தற்போது வரலாறு காணாத மழையால் நெல்மணிகளை 100% நனைத்து விட்டது இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும் கண்ணீரில் மிதக்கின்றன அரசு இதனை கொள்முதல் செய்யவேண்டும் அல்லது உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றனர் இனி வரும் காலங்களில் இது போல் பேரழிவில் இருந்து பாதுகாக்க நிலங்களில் ஒட்டியிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை தூர்வார வேண்டும் நேரடி கொள்முதல் மையங்கள் முறையாக களம் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்து தரவேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் வைக்கின்றனர் அரசு செய்யுமா அல்லது கண்ணீரிலும் தண்ணீரிலும் மிதக்க விடுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close