திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டார்.
மு0த்துப்பேட்டையை அடுத்த கோவிலூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். 35 வயதான் ராஜேஷ் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு ஆலங்காடு கிராம ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் அதிமுகவில் இணைந்தார். இன்று காலை தனது வீட்டிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஆலங்காடு அருகே மறைந்திருந்த மர்மகும்பல் அவரை விரட்டிச்சென்றது.
இருசக்கர வாகனத்தில் நிற்காமல் அவர் தொடர்ந்த நிலையில் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிய அந்த கும்பல் அவரின் தலையை துண்டித்து அருகே வீசிவிட்டு தப்பியது. கொலை செய்யப்பட்ட ராஜேஷ்மீது 2015ஆம் ஆண்டு மதன் கொலை தொடர்பான வழக்கு, 2020ஆம் ஆண்டு வினோத் என்பவரை கொலைசெய்ய முயன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?