இந்தியாவில் பிட்ச் இப்படிதான் இருக்கும் அவை எங்களுக்கு சாதகமாகத்தான் வடிவமைக்கப்படும் அது எங்கள் உரிமை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா சரமாரியாக பேசியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றிப்பெற்றது. சென்னை பிட்ச் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், பேட்ஸ்மேன்கள் விளையாட முடியாத வகையில் மோசமாக இருந்ததாகவும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்தனர். இப்போது 3ஆவது டெஸ்ட் போட்டி அகமதாபாதில் பகலிரவு போட்டியாக வரும் 24 ஆம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் பேசினார் "பிட்ச் இரு அணிகளுக்குமே பொதுவாகவே தயார் செய்யப்பட்டது. ஆனால் ஏன் இது குறித்து விவாதிக்கப்படுகிறது என தெரியவில்லை. இந்தியாவில் இருக்கும் அனைத்து பிட்சுகளும் காலம்காலமாக இதேபோலதான் உருவாக்கப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் இதுவரை செய்யப்படவில்லை, எதிர்காலத்திலும் மாறாது என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் அணிக்கும் ஒரு சாதகமான அம்சம் இருக்கும். அதேபோல நாங்கள் மற்ற நாட்டுக்கு செல்லும்போது அவர்களுக்கு சாதகமாக இருக்கும்" என்றார்.
மேலும் பேசிய அவர் "அப்போது எங்களைபற்றி அவர்கள் நினைத்து பார்க்காதபோது, நாங்கள் ஏன் அவர்கள் குறித்து நினைத்து பார்க்க வேண்டும். வீரர்களின் திறனைதான் பார்க்க வேண்டும், விவாதிக்க வேண்டுமே தவிர பிட்சை குறித்து விவாதிப்பது தேவையற்றது. அப்படி இல்லை என்றால் ஐசிசியிடம் முறையிட்டு உலகெங்கும் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் ஒரே மாதிரியான பிட்சுகளை உருவாக்க புதிய சட்டத்தை கொண்டு வர சொல்லலாம்" என்றார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!