ஜூம் கால் மீட்டிங்கின்போது ஒரு பெண் தனது கணவரை முத்தமிட முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.
தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் “Zoom call so funny" என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை ட்வீட் செய்துள்ளார். அந்த வீடியோவில், ஜூம் கால் மீட்டிங்கின்போது ஒரு நபர் பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதிப்பதில் மும்முரமாக இருந்தார். அப்போது அந்த நபரின் அறைக்கு வந்த அவரது மனைவி அவருக்கு திடுதிப்பென்று முத்தமிட கொடுக்க முயல்கிறார். இதனை எதிர்பாராத அந்த நபர், தான் மீட்டிங்கில் இருப்பதை காட்டும் வகையில், தனது லேப்டாப்பை நோக்கி சைகை காண்பிக்கிறார். இதில் அந்த நபரின் முகபாவனைகளை பார்த்து அந்த பெண் வெட்கம் கலந்த புன்னகையில் திளைக்கிறார்.
Zoom call .....so funny ? ??pic.twitter.com/6SV62xukMN
— Harsh Goenka (@hvgoenka) February 19, 2021Advertisement
இது தொடர்பாக மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசித்து பார்த்த ஆனந்த் மஹிந்திரா “ஹாஹா. நான் அந்த பெண்ணை இந்த ஆண்டின் சிறந்த மனைவியாக பரிந்துரைக்கிறேன். மேலும் கணவர் அதிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, முகம் சுழிக்காமல் இருந்திருந்தால், அவர்களை இந்த ஆண்டின் சிறந்த ஜோடியாக பரிந்துரைத்திருப்பேன், ஆனால் அவர் அதை செய்ய தவறிவிட்டார் என தெரிவித்துள்ளார்.
Haha. I nominate the lady as the Wife of the Year. And if the husband had been more indulgent and flattered, I would have nominated them for Couple of the Year but he forfeited that because of his grouchiness! @hvgoenka https://t.co/MVCnAM0L3W
— anand mahindra (@anandmahindra) February 19, 2021Advertisement
தற்போது இந்த வீடியோ இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளுடன் சமூக வளைதளங்களில் வைரலாகியுள்ளது. இது தொடர்பாக, நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி