குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருக்கும் உலகின் மிகப்பெரிய மைதானமான சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பகலிரவாக நடைபெறவுள்ள இந்தியா - இங்கிலாந்து இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான 55 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றது. இதனையடுத்து 3-ஆவது டெஸ்ட் போட்டி பிங்க் நிற பந்தில் பகலிரவு ஆட்டமாக அகமதாபாதில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி வரும் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பின்பு 4 ஆவது டெஸ்ட் போட்டியும் இதே மைதானத்தில் மார்ச் 4 ம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மொடேரா சர்தார் வல்லபாய் படேல் மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும். இங்கு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளது. முதலில் இங்கு 49 ஆயிரம் பேர் அமரும் வகையில் மைதானம் இருந்தது. மறு சீரமைப்புக்கு பிறகு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் ஆனது. மெல்பர்ன் ஸ்டேடியத்தில் 90 ஆயிரம் பேர் அமரும் வசதி உள்ளது. அதை அகமதாபாத் ஸ்டேடியம் முறியடித்தது. இந்த மைதானம் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் அதி நவீன வசதிகள் உள்ளன. மைதானத்தில் வீரர்களுக்காக 4 டிரெஸ்சிங் ரூம்கள் உள்ளன. மேலும் 11 சென்ட்டர் பிட்சுகளும் உள்ளன.
இந்த மைதானத்தில்தான் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்திருந்தபோது "நமஸ்தே ட்ரம்ப்" என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 சதவித ரசிகர்கள் மட்டுமே போட்டியை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி 3-வது டெஸ்ட் போட்டிக்கு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அங்கு 55 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. இப்போது பயிற்சி பெற்று வரும் இந்திய - இங்கிலாந்து வீரர்கள் இந்த மைதானத்தின் பெருமையை தங்களுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் தன்னுடன் கோலி, இஷாந்த் சர்மா, அக்ஸர் படேல், ஹர்திக் பாண்ட்யா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து "இந்தப் புதிய ஸ்டேடியத்தில் இருக்கும் உடற்பயிற்சி கூடம் அபாரமாக இருக்கிறது" என பதிவிட்டு இருக்கிறார். இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா "உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இருப்பது பெருமையாக இருக்கிறது. இங்கு எல்லாமே அற்புதமாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார். இதேபோல இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஆகியோர் ஸ்டேடியத்தின் புகைப்படத்தை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!