காங்கிரஸ் கட்சியினர் பொய் பேசுவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், காங்கிரஸ் கட்சியினர் சக நிர்வாகிகளிடம் பொய் சொல்வதை நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், “காங்கிரஸில் 70 லட்சம் உறுப்பினர்கள் உள்ளார்கள் என பொய்யாக அறிக்கை கொடுத்துவிட்டார்கள். இதை நம்பி 2016ஆம் ஆண்டு தேர்தலில் நான் நின்று விட்டேன். ஆனால் உறுப்பினர்களே நமக்கு (காங்கிரஸ்) ஓட்டு போடவில்லை. சராசரியாக ஒவ்வொரு பாராளுமன்றத்திற்கும் 30 ஆயிரம் வாக்குகள் தான் விழுந்தது. இதில் எப்படி 70 லட்சம் உறுப்பினர்கள் இருக்க முடியும். இதற்கு பொய்யாக சந்தா தொகை செலுத்தி பழைய பேப்பர்களை டெல்லிக்கு அனுப்பி விட்டார்கள். நம் நிர்வாகிகள் அங்கு டெல்லியில் இந்த பேப்பரை வைத்து பட்டாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். ஆகையால் காங்கிரஸ் என்பது பெரிய பொய். முதல் ஸ்டெப் என்னவென்றால் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்” என நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறினார்.
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'