பிறந்து ஏழு நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றோரே கையால் முகத்தை மூடி கொலை செய்த திடுக்கிடும் சம்பவம் காவல்துறை விசாரணை வெளியாகி உள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி - சிவப்பிரியா தம்பதிக்கு பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என நேற்று முன்தினம் நள்ளிரவு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பெண் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்ததைக் கண்ட மருத்துவர் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார், பெண் குழந்தை இறப்பு குறித்து உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து குழந்தையின் உடல் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மூச்சுத் திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து, உத்தப்பநாயக்கனூர் காவல்துறையினர் குழந்தையின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில் குழந்தையை கையால் முகத்தை மூடி கொலை செய்ததாக கூறி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குழந்தையின் பாட்டி நாகம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading More post
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கொரோனா அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 மடங்காக உயர்ந்த ஆக்சிஜன் தேவை
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை